வாழ்வியல்

டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என கண்டுபிடிப்பு

டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல வருட காலப்பகுதியில் இந்த எலும்புகள் ஐல் அவ் வைட், பிரிக்ஸ்டோன் அருகே உள்ள கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன. செளத்தாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவர் கிறிஸ் பார்கர், “பாரியோனிக்ஸில் கண்டறியப்பட்ட டைனோசர் எச்சங்களுடன் தற்போதைய டோனோசர் எச்சங்கள் வேறுபடுகின்றன. இதை பார்க்கும்போது நாம் நினைத்ததை விட பல வகை ஸ்பினோசாரிட் டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார். மூன்று […]

வாழ்வியல்

6 மில்லியன் ஆண்டுக்கும் குறைந்த வயதான புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வான வெளியில் 6 மில்லியன் ஆண்டுக்கும் குறைந்த வயதான புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வருகிறார்கள். இந்த நிலையில் முதல் முறையாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிடிஎஸ் 70 என்று பெயரிடப்பட்டுள்ள குள்ள நட்சத்திரத்திற்கு துணைக்கோளாக இந்தப் புதிய கிரகம் சுற்றுகிறது. இந்த குள்ள நட்சத்திரத்திற்கு 10 மில்லியனுக்கும் குறைவான வயதே இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும் இதன் துணைக்கோளின் வயது 5 முதல் 6 மில்லியன் வயதுகள் […]

வாழ்வியல்

பூமியின் ஓசோன் படலத் துளை தானாக மூடியது : ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பூமியின் வட துருவ பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை தானே மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் பூமியின் நிலப்பரப்பை அடையாமல் காக்கும் இயற்கையாக அமைந்த பாதுகாப்பு கட்டமைப்பே ஓசோன் படலம். வளிமண்டலத்தின் மூன்றாவது அடுக்கான ஸ்ரெட்டோஸ்பியரில்தான் ஓசோன் மிகுந்து காணப்படுகிறது. அதாவது பூமியிலிருந்து சுமார் 10 முதல் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் ஓசோன், பூமியை பல்வேறுபட்ட கதிர்வீச்சு தாக்குதல்களிலிருந்து […]