செய்திகள்

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் ஆரணி புதிய மாவட்டமாக உயர்த்தப்படும்

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் ஆரணி புதிய மாவட்டமாக உயர்த்தப்படும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உறுதி ஆரணி, மார்ச் 26– எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் ஆரணி புதிய மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் என்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உறுதிபட கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க வேட்பாளர், இந்து சமய அறநிலைய துறை […]

செய்திகள்

ஆரணியில் அரசு கலைக் கல்லூரி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதி

ஆரணி, மார்ச் 20– ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20 கிராமங்களில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆரணியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆரணி சட்டமன்றத் தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் தனது வீட்டின் அருகிலுள்ள ஓசூர் அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கரிக்கந்தாங்கல், ஆகாரம், நடுப்பட்டு, விண்ணமங்கலம், இராந்தம், தெள்ளூர், பொம்மிநகர், கனகம்பட்டு, […]

செய்திகள்

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா: அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு

ஆரணி, பிப். 24– அமைச்சர் சேவூர். எஸ். ராமச்சந்திரனின் இளையமகன் திருமண விழா ஆரணியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அண்ணா திமுக அமைப்பு செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ். ராமச்சந்திரன் –- மணிமேகலை தம்பதியின் இளைய மகன் எஸ்.ஆர். விஜயகுமாருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அரசு மருந்தாளுனர் எம்.கே கிரிராஜன் -– உமாமகேஸ்வரி தம்பதிகளின் மகள் டாக்டர். ஜி.மினதர்ஷினிக்கும் […]

செய்திகள்

456 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி இலவச வீட்டுமனைப் பட்டா

ஆரணி, பிப். 22– 456 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆரணி, வந்தவாசி, சேத்பட் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 456 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, 964 பயனாளிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் […]

செய்திகள்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா

ஆரணி, பிப். 20– ஆரணியில் நாளை மறுநாள் (22–ந் தேதி) முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைச்சர் சேவூர்.எஸ் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் -– மணிமேகலை தம்பதியின் இளையமகன் எஸ்.ஆர். விஜயகுமாருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அரசு மருந்தாளுனர் எம்.கே கிரிராஜன் –- உமாமகேஸ்வரி தம்பதிகளின் மகள் மருத்துவர். ஜி.மினதர்ஷினிக்கும் ஆரணி அடுத்த சேவூர் புறவழிச்சாலையில் உள்ள எஸ்.கே.வி திருமண மண்டபத்தில் 22–ந் தேதி […]

செய்திகள்

2742 பெண்களுக்கு ரூ. 20.39 கோடி திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ. 20.39 கோடி திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார் திருவண்ணாமலை, பிப். 16– திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் சேவூர். எஸ். ராமச்சந்திரன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூகநலத் துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி செலவில் திருமண நிதியுதவி […]