செய்திகள்

காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பு

திட்டக்குழு ஆய்வில் தாக்கல் சென்னை, டிச.17– “முதலமைச்சரின் காலை உணவு” திட்டத்தினால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு, “புதுமைப்பெண்” திட்டத்தால் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 27.6%, விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சார்ந்தவர்கள் 39.3% கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, ”புதுமைப்பெண் திட்டம்” “எண்ணும் எழுத்தும் திட்டம்” முதலான சீரிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. மாநிலத் திட்டக் குழுவின் மூலம் […]

Loading

செய்திகள்

சென்னையில் மழை நிவாரண பணிகள்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை, டிச.1– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயல், மழை பெய்த போதும், கால்வாய்களில் மழைநீர் தங்குதடையின்றி சென்று கொண்டிருப்பதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார். சென்னை பெருநகர மாநகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பெஞ்சல் புயலினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டு […]

Loading

செய்திகள்

விளாப்பாக்கம் பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் : கலெக்டர் சந்திரகலா ஆய்வு

ராணிப்பேட்டை, நவ. 6– ராணிப்பேட்டை மாவட்டடம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் விளாப்பாக்கம்- சின்னத்தக்கை சாலை மருத்துவாம்பாடி வரையில் 1.87 கி.மீ நீளத்திற்கு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா பார்வையிட்டு சாலையின் அகலத்தை ஆய்வு செய்தார்கள். பின்னர் சாலை ஓரம் இருபுறமும் மண் கொட்டி […]

Loading

செய்திகள்

திருவள்ளூரில் சிறுதானிய உணவு பொருள் கண்காட்சி திருவிழா

திருவள்ளூர், நவ. 6 திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழாவில் மகளிர் சுய உதவிகுழுக்களால் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கலெக்டர் டாக்டர். த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவின் நோக்கம் என்னவென்றால் மக்களிடையே சிறுதானிய உணவுகளை உட்கொள்ளப்படும் சூழ்நிலை மாறிவரும் இந்த […]

Loading

செய்திகள்

சென்னை – பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் : பணி கலெக்டர் சந்திரகலா ஆய்வு

ராணிப்பேட்டை, அக். 28 சென்னை – பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ. யு. சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சென்னை- – பெங்களூர் வரையில் சுமார் 262.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இச்சாலையில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்துடன் பயணிக்க முடியும். இச்சாலை பணியானது கர்நாடகா, ஆந்திரா சித்தூர் வழியாக […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணி

சென்னை, அக்.28 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:– சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்கவேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்தார். சென்ற 2022–ம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான 225 மீட்டர் […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் 2–ம் கட்டப் பணிகள்: அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை, அக் 26 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– கலைஞரின் ஆட்சி காலத்தில் 2007–ம் ஆண்டு தமிழ்நாடு அரசும் – ஒன்றிய அரசும் இணைந்து மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம். 22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு […]

Loading

செய்திகள்

வெள்ளி கோள் குறித்து ஆய்வு நடத்த 19 கருவிகளுடன் விண்கலத்தை அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டம்

சென்னை, அக்.8- முதல் முறையாக வெள்ளி கோளின் நிலப்பரப்பு குறித்த வரைபடம் தயாரிக்கவும், அங்குள்ள எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் விண்கலம் ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து 2-வதாக அமைந்துள்ள கோள் வெள்ளி (வீனஸ்). இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக […]

Loading

செய்திகள்

பட்டாபிராமில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணி: கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு

திருவள்ளூர், செப். 20 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்திற்குட்பட்ட பட்டாபிராமில் மாவட்ட கலெக்டர் டாக்டர். த.பிரபு சங்கர் ரூ.235 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகரத்தின் குறிப்பாக வடமேற்கு பகுதியின் வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளின் தேவை வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ரசாணை வெளியிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராமில் உள்ள 38.40 ஏக்கர் நிலத்தில் துவங்குவதற்கு திட்டமிடப்பட்டது அதன் அடிப்படையில் முதற்கட்டமாக […]

Loading

செய்திகள்

ஆற்காடு வட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை, செப். 19 உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆற்காடு வட்டத்தில் திட்டப் பணிகளை கலெக்டர் ஜெ.யு . சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆற்காடு வட்டம் ஆற்காடு நகராட்சியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவனூர் ஊராட்சியில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கரடிமலை கோடைக்கால்வாய் 100 […]

Loading