செய்திகள்

ஆர்ப்பாட்டம்: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

சென்னை, ஆக. 10– உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குனர் பா.ரஞ்சித், கட்சி ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். போராட்டத்தின்போது, நீதி வேண்டும் […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

சென்னை, ஆக. 9- கொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உள்பட இதுவரை 22 […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் அதிரடி கைது

சென்னை, ஜூலை 24– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வைரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை […]

Loading

செய்திகள்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமனம்

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு சென்னை, ஜூலை23-– உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியை தேசிய தலைவராக கொண்டு செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ம் தேதியன்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் 16-வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக யாரை நியமிக்கலாம்? என்பது […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 16– பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை […]

Loading

செய்திகள்

குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது

அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, ஜூலை 15– குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:– மாயாவதியோ, ஆம்ஸ்ட்ராங்கோ எங்களுக்கு தோழமை தான். வேண்டாதவர்கள் அல்ல. உண்மையான குற்றவாளிகளைத் தான் போலீசார் பிடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடும் போது குற்றவாளிகளை சுட்டுத்தான் பிடிக்க வேண்டியுள்ளது. அவசியமின்றி சுட வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.வினர் […]

Loading

செய்திகள்

பகுஜன் சமாஜ் தலைவர் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னை, ஜூலை 14- பகுஜன் சமாஜ் தலைவர் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை இன்று அதிகாலை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் இடம்பெற்ற பரபரப்பான சம்பவத்தில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சென்னை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் துப்பாக்கி மூலம் நடத்திய தாக்குதலில் திருவேங்கடம் உயிரிழந்தார். திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. போலீசார் அவரை கைது செய்ய […]

Loading

செய்திகள்

பொத்தூரில் புத்தமத வழக்கப்படி இறுதிச்சடங்கு: சந்தனப்பேழையில் வைத்து ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்

ஜெய்பீம்.. ஜெய்பீம் என முழங்கிய ஆதரவாளர்கள் சென்னை, ஜூலை 8– நீதிமன்ற உத்தரவைப்படி ஆவடி அருகே பொத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் சந்தனப்பேழையில் வைத்து இன்று அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கிருந்த ஆதரவாளர்கள் ஜெய்பீம்… ஜெய்பீம் என முழக்கமிட்டனர். சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் குடியிருப்பு அருகே கடந்த 5ம் தேதி அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான மேலும் 3 பேர் சிறையிலடைப்பு

சென்னை, ஜூலை 8– ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 3 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது ; நாளை உடல் அடக்கம்

கொலை செய்தது ஏன்? அதிர்ச்சி வாக்குமூலம் ஆதரவாளர்கள் சாலை மறியல்; கைது சென்னை, ஜூலை 6– பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்தது ஏன்? என்பது பற்றி கைது செய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளது. ஒரு வாரமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு இந்த கொலையை செய்திருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் […]

Loading