செய்திகள்

2028 இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: எலான் மஸ்க்

நியூயார்க், அக். 22– 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, நான் பிறந்தது ஆப்பிரிக்கா என்பதால் போட்டியிட மாட்டேன் என்று எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பாக, கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு […]

Loading

செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறைப் பயணம்

நாக்சாட், அக். 17– ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல் பகுதியாக, கடந்த 13-ந்தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி […]

Loading

செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்தது: 140 பேர் பரிதாப பலி

அபுசா, அக். 17– நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 140 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. மக்கள் 140 பேர் பலி இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென […]

Loading

செய்திகள்

5ஜி மொபைல் சந்தையில் 2-வது இடத்தில் இந்தியா

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது புதுடெல்லி, செப்.9– 5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதுகுறித்து கவுன்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை சீனா தக்கவைத்துள்ளது. அமெரிக்கா தற்போது 3-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய 5ஜி மொபைல் ஏற்றுமதி 20 சதவீதம் வளர்ச்சி கண்டது. இதில் ஆப்பிள் 5ஜி மொபைல்போன் முக்கிய பங்கை […]

Loading

செய்திகள் முழு தகவல்

உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மை: பரவுவது எவ்வாறு; அறிகுறிகள் என்ன?

இந்தியா, தமிழ்நாட்டில் குரங்கம்மையின் நிலை? ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் குரங்கம்மையை (MPox) உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எம்பாக்ஸ் அல்லது குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்த நோய் 1970 ஆம் ஆண்டுகளில் காங்கோ ஜனநாயக குடியரசில் கண்டறியப்பட்ட நிலையில், அதுகுறித்த அலட்சியத்தால் 2022 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் 99,178 பேருக்கு பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் ஜனநாயக காங்கோ குடியரசு […]

Loading

செய்திகள்

எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு: 200-க்கும் மேற்பட்டோர் பலி

அடிஸ் அபாபா, ஜூலை 24- ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதுவரை 148 ஆண்கள் மற்றும் 81 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கோபா மண்டலத்தில் கெஞ்சோ–ஷாச்சா பகுதியில் இந்த பேரிடர் சம்பவம் நடந்துள்ளது. […]

Loading