காபூல், செப். 12– ஆப்கானிஸ்தானில் போதிய உணவு கிடைக்காமல் கடந்த 6 மாதங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள் இறப்பதற்கு வறுமையே பொதுவான காரணமாக இருக்கிறது. இங்கு மக்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் குழந்தைகள் இறக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் மருத்துவர்களால் கூட அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு நிலைமை கட்டுப்பாடில்லாமல் உள்ளது. ஆப்கானிஸ்தானில் 3.2 மில்லியன் குழந்தைகள் […]