புதுடில்லி , மே 28– வைரல் ஆகிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவை வடிவமைத்தது லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் லோகோ, பஹல்காம் படுகொலைகளுக்கு பதிலடியாக இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களுக்கு அடையாளமாக மாறியுள்ளது. இந்த சின்னம், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியை பிரதிபலிக்கிறது. மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களுக்கு […]