செய்திகள்

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; தயிர் ரூ.5 அதிகம்

சென்னை, ஜன. 31– தமிழகத்தில் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் இந்த மாதம் முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தி உள்ளன. சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஆந்திராவை சேர்ந்த திருமலா நிறுவனம் நாளை (1-ந்தேதி) பால் விலையை உயர்த்துகிறது. மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது. இந்த நிறுவனங்கள் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 […]

Loading

செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகளில் இருந்து 37 லட்சம் மாணவர்கள் இடைநின்றல்

புதுடெல்லி, ஜன.2-– நாடு முழுவதும் கடந்த 2023-–24-ம் கல்வி ஆண்டில் 37 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடையில் நின்றிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி குறித்த தரவுகளை சேகரிக்க ‘கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ்’ என்ற தளத்தை மத்திய கல்வி அமைச்சகம் பராமரித்து வருகிறது. இந்த தளம் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டு உள்ளது. 2022-–23-ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு–ஆந்திரா இடையே 4 வழிச்சாலை

28 கி.மீ. நெடுஞ்சாலைத் திட்டதிற்கு ரூ.1,338 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தகவல் சென்னை, டிச. 20– தமிழ்நாடு – ஆந்திரா இடையேயான 28 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய காரணியாக உள்ளன. நாடு முழுவதும் 4 வழிச்சாலை, ஆறு வழிச்சாலை எட்டு வழிச்சாலை என நெடுஞ்சாலைகள் […]

Loading

செய்திகள்

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளை மீண்டும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு வழங்குங்கள்

ஆந்திரா அமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் கோரிக்கை சென்னை, டிச.18- திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஆந்திரா மந்திரியிடம் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கடந்த 1974-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஒருநாள் திருப்பதி சுற்றுலா பயணத்தை இயக்கி வருகிறது. 1997-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு […]

Loading

செய்திகள்

நடிகை கஸ்தூரி ஆந்திராவில் தலைமறைவு?

சென்னை, நவ. 16– தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் கடந்த 3-ந்தேதி பிராமணர் சமுதாயத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் அறிவித்தார்.நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு […]

Loading

செய்திகள் முழு தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை, செப். 23 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடியான […]

Loading

செய்திகள் முழு தகவல்

ஆந்திரா, தெலுங்கானாவில் தொடரும் கனமழையால் 140 ரெயில்கள் ரத்து

ஐதராபாத், செப் 2 ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்ததையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீட்பு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.தொடரும் கனமழையால் 140 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியதை அடுத்து, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா, அமராவதி, மங்களகிரி, […]

Loading