சென்னை, அக்.23– தீபாவளி பண்டிகையையொட்டி, உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர் ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை களைகட்டியது. காலை […]