திருவண்ணாமலை, ஜூலை 27– திருவண்ணாமலை கோயில் உண்டியல் காணிக்கை 305 கிராம் தங்கத்துடன் ரூ.3 கோடியே 46 லட்சம் வசூலாகி இருந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆடி மாதத்திற்காக பௌர்ணமி கிரிவலம் நிறைவடைந்தது. இதில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் […]