செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை: இந்தோனேஷியாவில் 63 நோயாளிகள் பலி

ஜாவா, ஜூலை 6– இந்தோனேஷியாவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இந்தோனேஷியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதால், கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தநிலையில் ஜாவாவில் உள்ள சர்ஜிடோ மருத்துவமனையில் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் இருந்ததாகவும், ஆனால் நோயாளிகள் வருகை அதிகரித்ததால் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும் தற்போது தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

செய்திகள்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்

சென்னை, ஜூன் 11– ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் கொரோனா நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா வார்டு இயங்கும் கட்டிடத்தின் 8-வது தளத்தில் அழுகிய நிலையில் பெண் உடல் கிடந்தது. அந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்த பெண், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3வது தளத்தில் கொரோனா […]

செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தம்

தூத்துக்குடி, மே 14– எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. அதன்பேரில், கலெக்டர் […]

செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி சென்னை, கோவைக்கு புறப்பட்டது

தூத்துக்குடி, மே 13– தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான அக்சிஜனுடன் முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து […]

செய்திகள்

104 சேவை எண்ணுக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, மே 9– 104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் உதவி கிடைக்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் சித்த மருத்துவ மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– மிதமான தொற்று ஏற்பட்டவர்களை குணப்படுத்த சித்தா மையங்கள் தொடங்கப்படுகின்றன. இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், அமுக்கர சூரண […]

செய்திகள்

தமிழகத்துக்கு ஆக்சிஜன் அளவு 419 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு

டெல்லி, மே 9– தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை 220 மெட்ரிக் டன்னில் இருந்து, 199 டன் உயர்த்தி, 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் […]

செய்திகள்

மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை விவரங்களுக்கு புதிய இணையதளம்: ஸ்டாலின் ஏற்பாடு

சென்னை, மே 8– தமிழ்நாட்டில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள இடங்களை பற்றி தெரிந்துகொள்ள, தமிழ்நாடு அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் வசதி தேவைப்படாத நோயாளிகளுக்கான படுக்கை விவரங்கள் என அனைத்து தகவல்களையும் இந்த இணையத்தில் தெரிந்துகொள்ள முடியும். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:– தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் […]

செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் இறக்குமதி

சென்னை, மே.6- வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் நேரடியாக தனியார் அமைப்புகள் சார்பில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கருவிகளை விமான நிலையத்தில் இருந்து உடனடியாக ‘டெலிவரி’ செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. 2-வது அலையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆக்சிஜன் தட்டுப்பாடுதான். எனவே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை […]

செய்திகள்

1 1/2 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தியதற்கு 10 மரங்கள் நடுங்கள்: மருத்துவமனை கோரிக்கை

நாக்பூர், ஏப். 27– ஒரு வாரத்தில் 1 1/2 லட்சம் லிட்டர் ஆக்சிஜனை கொரோனா நோயாளி பயன்படுத்தியதற்கு, 10 மரங்களையாவது நட வேண்டும் என்று மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாக்பூரிலுள்ள ‘கெட் வெல்’ மருத்துவமனையில் 41 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வாரம் முழுவதும் ஐசியு-வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. […]

செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்

புதுடெல்லி, ஏப்.26–- பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலையால் தினந்தோறும் 3.50 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்தி தேவையான […]