திருமுருகனுக்கு திருமணம் என்று எல்லோருக்கும் அழைப்பிதழ் வைத்துக் கொண்டிருந்தான். வீட்டில் அவன் தான் கடைசி பிள்ளை என்பதால் அந்தத் திருமணத்தை தடபுடலாக நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள் . யார் யார் அவனுக்கு தெரிந்திருக்கிறார்களோ அத்தனை பேர்களுக்கும் ஓடி ஓடி அழைப்பிதழ் வைத்துக் கொண்டிருந்தான் திருமுருகன். அவன் ஒருவனே அத்தனை பேரையும் தேடித் தேடி சென்று அழைப்பிதழ் வைத்தான் ” என்ன திருமுருகா கல்யாணமா? என்று கேட்க ஆமா லவ் மேரேஜா அரேஞ்ச் டு மேரேஜா? […]