சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா

ஐதராபாத், ஏப். 28– பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 2003-ல் கங்கோத்ரி என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அல்லு அர்ஜுன். நடிகர் சிரஞ்சீவியின் உறவினர். ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அல்லு அர்ஜுன் இதுபற்றி கூறியதாவது: ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். […]