சிறுகதை

நாட்டு மருந்து – ராஜா செல்லமுத்து

நகரின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் ஒரு பெரிய அலோபதி மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார் இருளப்பன். அவர் படித்தது எல்லாம் மருத்துவம். எம்பிபிஎஸ் படித்தவர் . ஆனால் அவர் எழுதும் மருந்திற்கும் போடும் ஊசிக்கும் மட்டுமே படித்து இருக்கிறாரே ஒழிய , மற்றபடி அவர் நடமாடும் ஒரு சித்தமருத்துவர். அது அலோபதியின் மீது இருக்கும் அவ நம்பிக்கை அல்ல . நம் தமிழ் மருத்துவத்தின் மீது இருக்கும் நம்பிக்கை. மருத்துவம் படித்து இருந்தாலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர். […]