செய்திகள் நாடும் நடப்பும்

உக்ரைன் மீதான போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்:

ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு மாஸ்கோ, ஏப். 29– உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப், “இரு நாடுகளும் தாக்குவதை நிறுத்தி ஒரு […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு:

அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு சென்னை, ஏப்.26- ”மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும்” என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டத்தொடரில், மேட்டூர் அணை திறப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து, சட்டசபையில் துரைமுருகன் பேசியதாவது: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்களில் மண் திட்டுகள் உள்ளது. தண்ணீர் தங்குயின்றி செல்ல, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5,021 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாசன கால்வாய்களை […]

Loading

செய்திகள்

சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடியில் சர்வதேச தரத்தில் தைவான் தொழில் பூங்கா

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு : சென்னை, ஏப்.26- சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடியில் தைவான் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். சட்டசபையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்த நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் அமைக்கப்படும். * […]

Loading

செய்திகள்

மாதந்தோறும் ரூ.200 கட்டணத்தில் வீட்டுக்கும் அதிவேக இணையதள சேவை

சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு : சென்னை, ஏப்.26- மாதந்தோறும் ரூ.200 கட்டணத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சட்டசபையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்கள் சேவை துறை மானியக்கோரிக்கை யின்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார். எங்களது துறை சார்பாக பொதுமக்களுக்கு, சுமார் 300 இடங்களில் இலவச வைபை சேவை அளித்து கொண்டு இருக்கிறோம். அம்மா உணவகம், பஸ் நிலையம் […]

Loading

செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு: சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னை, ஏப்.23- அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியம் உயர்வு செய்யப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். சட்டசபையில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: * போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களை கண்டறிந்து விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வுத் துறையின் பயன்பாட்டுக்காக 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வாங்கப்படும். * போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத […]

Loading

செய்திகள்

மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு: மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை, ஏப்.21 மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணி நடைபெற்று வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த பணிக்கு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மின் மீட்டரை கணக்கெடுக்க ரூ.4-ம், கிராமப்புறம், மலைப்பகுதியாக […]

Loading

செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்தம்: ஈஸ்டரையொட்டி புதின் அறிவிப்பு

மாஸ்கோ, ஏப். 20– ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், உக்ரைனும் தங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் இதனை உக்ரைன் சமாளித்து வருகிறது. இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். […]

Loading

செய்திகள்

‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் அறிவிப்பு : சென்னை, ஏப். 20– 2025–ம் ஆண்டிற்கான ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு இணையதளம் மூலம் மே 3–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 வயது முதல் 35 வயது […]

Loading

செய்திகள்

முடிவுக்கு வரும் இஸ்ரேல் போர்?

பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்: ஹமாஸ் அறிவிப்பு காசா, ஏப்.18– காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார். இந்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அந்த நாட்டின் 59 பணயக்கைதிகளையும் விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். […]

Loading

செய்திகள்

‘‘ஸ்டார் அகாடமி’’ தேர்வுப் போட்டிகள் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் : சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை, ஏப் 17– சென்னை மாவட்டம் “எஸ்டிஏடி (SDAT) ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்” – துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு தேர்வுப் போட்டிகள் மற்றும் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– துணை முதலமைச்சர் 2024–-2025–ம் ஆண்டிற்காண மான்ய கோரிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் 38 மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி வெவ்வேறு விளையாட்டுகளுடன் […]

Loading