சென்னை, ஜன.13-– சட்டசபை விவகாரத்தில் கவர்னர் மாளிகை மீண்டும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 6-–ந் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் படிக்கவில்லை என்பதை காரணமாக கூறி, உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அதே நேரம் அரசு தயாரித்து கொடுத்த உரையை அவர் படிக்காமல் சென்றாலும், அவை விதிகளின்படி அவைக்குறிப்பில் அது […]