செய்திகள்

அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு :

4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் 82 ஆயிரம் மாணவர்கள் பலன் சென்னை, ஏப்.25-– அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கடந்த 4 ஆண்டுகளில் தொழில்நுட்ப படிப்புகளில் 82 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், உயர்கல்விக்கான வாய்ப்பு களை ஏற்படுத்தவும் அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கம்

புதுடெல்லி, ஏப். 24– பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று எக்ஸ் தள நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் […]

Loading

செய்திகள்

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 பேர் உயிரிழப்பு

மக்கள் குறைகளை கேளாத ‘கோமா’ அரசு : எடப்பாடி கண்டனம் சென்னை, ஏப்.20– திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, ஒரு கோமா அரசு’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் […]

Loading

செய்திகள்

அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு

ஈரோடு, ஏப்.16- பவானி அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் 5 பேரை திருச்சியில் போலீசார் மீட்டனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தேர்வை எழுதிய மாணவிகள் நேற்று மதியம் வெளியே வந்தனர். இதில் பவானியை சேர்ந்த 4 மாணவிகளும், சித்தோடு பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும் என மொத்தம் 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. கடைசி […]

Loading

செய்திகள்

அரசுக்கு எதிராக பதிவு: ஏட்டு பணியிடை நீக்கம்

சென்னை, ஜன. 01– அரசுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதோடு சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. ஏட்டு பணியிடை நீக்கம் இந்நிலையில் அன்பரசன் என்பவர் திமுக அரசுக்கு எதிர்ப்பு […]

Loading

செய்திகள்

விலைவாசி உயர்வால் மக்கள் அவதி ; கும்பகர்ணன்போல தூங்கும் அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி, டிச. 24– விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாடம் போராடி வருவதாகவும், ஆனால் கும்பகரணன் போல் மத்திய அரசு தூங்குவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்ச்சித்துள்ளார். சமீபத்தில் கிரி நகரில் உள்ள காய்கறி சந்தைக்குச் சென்றபோது, உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் படும் அவதியும், அவர்கள் அடையும் இன்னல்கள் பற்றியும் இல்லத்தரசிகளுடன் ராகுல் காந்தி உரையாடிய விடியோ பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– சில நாட்களுக்கு […]

Loading

செய்திகள்

மழை பாதிப்பை சமாளிப்போம்: ஸ்டாலின் உறுதி

சென்னை, டிச.13– மழை வெள்ள பாதிப்பை சமாளித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? முதலமைச்சர் பதில்: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே […]

Loading

செய்திகள்

அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கும் சாதி வெறி – மதவெறி சக்திகள்

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை ‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ சென்னை, டிச 6– தமிழ்நாட்டில் திராவிட மாடல் திமுக அரசுக்கு அவப்பெயர் உண்ணடாக்க நினைக்கும் சாதிவெறி மதவெறி சக்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். ‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ என்று அவர் உறுதிபட கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற, தூய்மைப் பணியாளர்களை தொழில் […]

Loading

செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: 3 மாதத்தில் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது

பாரிஸ், டிச. 5– பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் பிரதமரான மூன்றே மாதத்தில் மிஷேல் பார்னியர் பதவியை இழந்தார். அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இத்தேர்தலில் மேக்ரானின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலது சாரிகள் […]

Loading

செய்திகள்

சிரியாவில் அரசுக்கு எதிரான ஆயுதக்குழு அலெப்போ நகரத்தை கைப்பற்றியது

தமஸ்கஸ், டிச. 03– சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் அந்நாட்டின் 2 வது பெரிய நகரமான அலெப்போவை ஆயுதக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நெடுங்காலமாகவே இருந்த மன்னராட்சி, சர்வாதிகாரம், ஒரு நபர் ஆட்சி அல்லது ஒற்றைக் கட்சியின் ஆட்சி என ஆட்சிமுறை நடைபெற்று வந்தது. இதற்கு எதிராக துனிசியாவில் தொடங்கிய மக்கள் புரட்சி வெற்றிபெற்று மக்களாட்சி முறைக்கு வழிவகுத்தது. இதனை வரலாற்றாய்வாளர்கள் ‘மல்லிகைப் […]

Loading