சென்னை, மே.17- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உயர் அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை முன்னெடுக்க இருக்கிறது. பிளஸ்-–2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான தேர்வு முடிவு கடந்த 10-ந்தேதியும் வெளியானது. தேர்வு எழுதியவர்களில் பிளஸ்-–2 தேர்வில் 94.56 சதவீதமும், எஸ்.எஸ்.எல்.சி.யில் 91.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்வு முடிவில் 397 அரசு பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத […]