கோவை, அக். 24– பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.நடத்துநராக பொள்ளாச்சியை சேர்ந்த கதிரேசன் என்பவர் பணியில் இருந்தார். இப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இப்பேருந்து காலை 8 மணியளவில் மயிலேறிபாளையத்தை கடந்து ஒத்தகால் மண்டபம் […]