மதுரை, செப். 28– சந்திரபாப நாயுடுவுக்கு பக்தி கிடையாது, அரசியல் சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடி வருகிறார் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது:– “உண்மையில் மிகக் கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார். […]