செய்திகள் நாடும் நடப்பும்

ஐசிசி குழப்பம்

தலையங்கம் இந்திய கிரிகெட் அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்த பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி யாரும் கலந்து கொள்ளாதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி யாரும் இல்லை. ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் தேவஜித் சைகியா, நியூஸிலாந்து கிரிக்கெட் […]

Loading

செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ் மீட்பில் அரசியல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

நியூயார்க், பிப். 20– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருப்பது அரசியலே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும், அரசு செயல்திறன்துறை தலைவர் எலான் மஸ்க்கும் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய டிரம்ப், […]

Loading

செய்திகள்

2–ம் ஆண்டில் தவெக: மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்: நடிகர் விஜய் சூளுரை

தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தமிழக வெற்றிக் கழகம் மாறும், மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் 2ம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி […]

Loading

செய்திகள்

மக்களிடம் வெறுப்பை விதைக்காமல் அன்பை விதைக்கும் அரசியலே தேவை

பிரியங்காவை புகழ்ந்து ராகுல் காந்தி பேச்சு திருவனந்தபுரம், நவ. 04– எனது தந்தை கொலையில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டவரையே கட்டி அணைத்து, அவரை பற்றி கவலைப்பட்ட அன்புள்ளம் கொண்டவர் பிரியங்கா காந்தி என்று ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு, 13 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்காவும், பா.ஜ.க வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் மற்றும் இடதுசாரி வேட்பாளராக சத்யன் மோகெரியும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் […]

Loading

செய்திகள்

அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி கடமை ஆற்றுங்கள்: கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை, அக்.19- பிளவுவாத சக்திகளிடம் இருந்து விலகி அரசியல் சட்ட நெறிமுறைகளின் படி கடமை ஆற்றுங்கள் என்று தமிழக கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார். தமிழக கவர்னரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்கு பதில் அளித்துள்ள […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

2 மாநில சட்டமன்ற தேர்தல் தரும் பாடம்

தலையங்கம் அண்மையில் வெளிவந்த அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் முக்கிய அரசியல் பரிமாணங்களையும், மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றன. பாரதீய ஜனதா கட்சிக்கு (பாஜக) அரியானாவில் வெற்றி மிக முக்கியமானது. தேர்தலுக்கு முன் வெளிவந்த கருத்துக் கணிப்புகளை தாண்டி, மூன்றாவது முறை தொடர்ந்து வெற்றியை பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாதது என்பது மீண்டும் நிரூபணமாகி […]

Loading

செய்திகள்

பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்று புரியவைப்போம்: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

சென்னை, அக்.4– தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர் என்று தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும், வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் […]

Loading

செய்திகள்

அதிமுகவுக்கு அழைப்பு ஏன்? மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் விளக்கம்

சென்னை, அக். 03– மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது ஏன் என்றும் மதுவிலக்கை தமிழ்நாட்டில் தள்ளி வைத்தது யார் என்பது குறித்தும் திருமாவளவன் மாநாட்டில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசியலில் அதிகம் எதிர்நோக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விசிக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டனர். விசிக தலைவர் திருமாவளவன் […]

Loading

செய்திகள்

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்: ராகுல்காந்தி அழைப்பு

புதுடெல்லி, செப்.30- உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிகமான பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என ராகுல் காந்தி அழைப்பு விடுத்து உள்ளார். அரசியல் மற்றும் முடிவு எடுப்பதில் பெண்களுக்கும் சம பங்களிப்பு வழங்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி அபியான்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதைப்போல அரசியல் அரங்கில் பெண்களின் குரலை வலுப்படுத்தவும், சமூகத்தில் தேவையான […]

Loading

செய்திகள்

சந்திரபாபு நாயுடு சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடுகிறார்: நடிகை ரோஜா குற்றச்சாட்டு

மதுரை, செப். 28– சந்திரபாப நாயுடுவுக்கு பக்தி கிடையாது, அரசியல் சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடி வருகிறார் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது:– “உண்மையில் மிகக் கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார். […]

Loading