செய்திகள்

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி, அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்

மத்திய அரசு அறிவிப்பு புதுடெல்லி, ஜூலை 13- நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி, அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அரசிதழில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்போது இருந்த மத்திய அரசு முற்றிலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது. இந்திய மக்கள், அத்துமீறல்களுக்கும், அராஜகங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர். […]

Loading