நாடும் நடப்பும்

மம்தா நடத்தும் அரசியல் சதுரங்கம் ராணியை வீழ்த்தினாலும் ஆட்டம் முடியாது!

நாட்டின் ‘தலை முதல் வால்’ வரையான பகுதிகளான அசாம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கிவிட்டது. இந்த ஐந்து சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் ஒன்றான வங்கத்தில் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்துவதே பாரதீய ஜனதாவின் முக்கிய குறியாக இருக்கிறது. இம்முறை அங்கு தான் எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த முறையும் இம்மாநிலத்தில் ஏழு கட்டங்களாகவே தேர்தல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். மேலும் 2019 […]