டெல்லி, ஜூன் 16– இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசின் அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்தான அறிவிப்பை கடந்த மாதம் ஒன்றிய அரசு வெளியிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்த்து மேற்கொள்ளப்படும் என ஒன்றிய அரசு அறிவித்த நிலையில், 2026 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கி 2028 ஆம் ஆண்டு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. […]
![]()



