திருத்தப்பட அரசாணை வெளியீடு சென்னை, ஏப். 18 தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணி நியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.82, பத்தி 4-ல் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பதிலாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் […]