செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை: புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும்

சட்டசபையில் அமைச்சர் உதயநிதி உறுதி சென்னை, ஜன. 8– மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பம் செய்தால், தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:– பெண்களின் வாழ்க்கை தரம் மேம்படவும், […]

Loading

செய்திகள்

கல்வி நிறுவனங்களில் அனைத்துப் பகுதியிலும் மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்

அமைச்சர் கோவி. செழியன் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு சென்னை, ஜன.8– பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்ததாவது:– அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எந்தவொரு […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் ரூ.7,126 கோடி மதிப்பிலான 7,387 ஏக்கர் கோவில் சொத்து மீட்பு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் சென்னை, ஜன. 5– தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 7,387 ஏக்கர் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று ஆணையர் அலுவலகத்தில், 38 மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் தனி வட்டாட்சியர்களின் (ஆலய நிர்வாகம்) சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தனி வட்டாட்சியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட நில மீட்பு மற்றும் நில அளவை பணிகள் குறித்தும், தனி […]

Loading

செய்திகள்

குவைத்தில் காணாமல் போன திருத்தணி இளைஞர் பத்திரமாக மீட்பு

முதல்வர், அமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி திருவள்ளூர், டிச. 12– திருவள்ளூர் சுற்றுலா மாளிகையில் திருத்தணி இஸ்லாம் நகரை சேர்ந்த காஜிஅலி குவைத்தில் பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் டாக்டர்.த. பிரபு சங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்கள். பின்னர் அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில், […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக சோதனை

சென்னை, அக். 24– முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆர்.வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான கட்டிடங்களை கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சமாக […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, அக். 23– முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். வீட்டு வசதி […]

Loading

செய்திகள்

கர்நாடக அமைச்சரின் மனைவியை கேவலமாக பேசிய பாஜக எம்எல்ஏ

கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெங்களூரு, அக். 18– கர்நாடக அமைச்சரின் மனைவி குறித்து, அவதூறாக பேசிய பாரதீய ஜனதா எம்எல்ஏ பசன கவுடா பாட்டீலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குடும்பம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீல் யத்னல், “தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் […]

Loading

செய்திகள்

மின் தடை– மின்சார பாதுகாப்பு புகார்களுக்காக 3 ஷிப்டுகளில் கூடுதலாக 10 பேர் நியமனம்

அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் இனி நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை சென்னை, அக். 16– வடகிழக்கு பருவமழையினையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரத்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ”மின்னகம் – மின்நுகர்வோர் சேவை மையத்தில்” ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகமான சென்னையில் முறைப்பணி ஒன்றிற்கு 65 நபர் வீதம் 3 […]

Loading

செய்திகள்

பேரிடரிலும் விளம்பரத்துக்கு ஏங்கும் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

சென்னை, அக். 15– தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கொச்சைப்படுத்துவதா? என அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். பருவமழையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் […]

Loading

செய்திகள்

கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும்

அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு சென்னை, அக். 15– கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். […]

Loading