சென்னை, ஏப். 11- திமுகவின் புதிய துணை பொதுச்செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அமைச்சர் பொன்முடியின் அந்த பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி தன் கண்டத்தை தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதன்படி, திமுக துணை […]