செய்திகள்

456 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி இலவச வீட்டுமனைப் பட்டா

ஆரணி, பிப். 22– 456 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆரணி, வந்தவாசி, சேத்பட் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 456 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ் ரூ.2.01 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, 964 பயனாளிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் […]

செய்திகள்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா

ஆரணி, பிப். 20– ஆரணியில் நாளை மறுநாள் (22–ந் தேதி) முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைச்சர் சேவூர்.எஸ் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் -– மணிமேகலை தம்பதியின் இளையமகன் எஸ்.ஆர். விஜயகுமாருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அரசு மருந்தாளுனர் எம்.கே கிரிராஜன் –- உமாமகேஸ்வரி தம்பதிகளின் மகள் மருத்துவர். ஜி.மினதர்ஷினிக்கும் ஆரணி அடுத்த சேவூர் புறவழிச்சாலையில் உள்ள எஸ்.கே.வி திருமண மண்டபத்தில் 22–ந் தேதி […]

செய்திகள்

யானைகள் நலவாழ்வு முகாம்: 3 அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

கோவை, பிப்.9– கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி ஊராட்சி, பவானி ஆற்றுப் படுகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக 13வது யானைகள் நலவாழ்வு முகாமினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து, இம்முகாமில் கலந்து கொண்டுள்ள யானைகளுக்கு பழங்கள் மற்றும் காய்கனிகளை வழங்கினர். தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோயிலுக்கு அருகில் […]

செய்திகள்

பழநி பஞ்சாமிர்தம் தபால் மூலம் பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும்

ரூ. 250 கட்டணம் செலுத்தினால் பழநி பஞ்சாமிர்தம் தபால் மூலம் பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல் சென்னை, பிப். 6– பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்த பிரசாதம் தபால் மூலம் பக்தர்களின் வீட்டுகளுக்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கூறியுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை […]

செய்திகள்

சென்னை மண்டல இணை ஆணையர்–2 அலுவலகம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்தார்

இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக வசதிக்காக சென்னை, பிப்.3 இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக வசதிக்காக சென்னை மண்டல இணை ஆணையர் 2 அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக வசதிக்காக 11 இணை ஆணையர் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைக்கு அரசாணை (நிலை) எண்.154 ன் படி 9 இணை ஆணையர் […]