செய்திகள்

விழுப்புரம் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் சி.வி. சண்முகம்

விழுப்புரம், மார்ச் 6– விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் 3வது முறையாக போட்டியிடுவதையொட்டி அண்ணா தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் ஏற்கனவே கடந்த 2011, 2016ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சி.வி.சண்முகம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. மாநில மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் கால் கோல் விழா

விழுப்புரம், பிப். 25– விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் அண்ணா தி.மு.க. மாநில மாநட்டிற்கான கால் கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது. அண்ணா தி.மு.க. சார்பாக கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை […]

செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் திருப்பதி ஏழுமலையான் கோவில்: எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்பேட்டை, பிப். 22– கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பூமி பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இன்று அடிக்கல் நாட்டினார். ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலைப்போல நாட்டின் பல இடங்களில் கோவில்களை அமைக்க திருப்பதி தேவஸ்தான் திட்டமிட்டு கோவில்களை கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏழுமலையான் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்கான 4 […]

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகள்

விழுப்புரம், பிப். 20– விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், ஓலக்கூர், வல்லம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஏழை எளிய பாமர மக்கள் நல்ல சிகிச்சை பெற வேண்டும் என்பதற்க்காக ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும். இத்திட்டத்தினை உடனடியாக செயல்படுத்தி தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் […]

செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியது அண்ணா தி.மு.க. அரசு

கள்ளக்குறிச்சி, பிப். 18– தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியது அண்ணா தி.மு.க. அரசு தான் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் பெருமிதத்துடன் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் , சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் சங்கராபுரம் பகுதியில் 134 பெண்களுக்கு 99,76,800 ரூபாய் மதிப்புள்ள தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் 181 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் […]

செய்திகள்

வீடூர் அணை, நந்தன் கால்வாய் சீரமைப்புப் பணி: அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கினார்

விழுப்புரம், பிப். 16-– விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.70 கோடியில் நந்தன் கால்வாய் சீரமைப்பு, வீடூர் அணை புனரமைப்புத் திட்டப் பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி- விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள நந்தன் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக ரூ.26.57 கோடியில் சிமென்ட் கால்வாயாக மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. செஞ்சி அருகே பனமலைப்பேட்டையில் நடைபெற்ற இதற்கான விழாவில், […]

செய்திகள்

அமைச்சர் சி.வி. சண்முகம் பற்றி அவதூறு: யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை, பிப். 8– அமைச்சர் சி.வி. சண்முகம் பற்றி இணையதளத்தில் அவதுாறு பரப்பியதாக, தனியார் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் சார்பாக அண்ணா தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘அண்ணா தி.மு.க. அரசியல் எதிரிகளால் அமைச்சர் சி.வி. சண்முகம் பெயரை களங்கப்படுத்த […]

செய்திகள்

திருவக்கரையில் புவியியல் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்தார்

விழுப்புரம், பிப். 1– விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புவியியல் பூங்கா அமைக்கும் பணியினை பூமிபூஜை மூலம் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரையில் தொன்மையான கல்மரப் படிவங்களை பாதுகாக்கும் நோக்கில் ரூ.5.00 கோடிமதிப்பீட்டில் 50.15.0 ஹெக்டேர் பரப்பளவில், அருங்காட்சியகம், நூலகம், வரவேற்பரை, திரையரங்கம், அலுவலகம், கலைகாட்சி கூடம் மற்றும் நிர்வாக அலுவலகத்துடன் கூடிய புவி யியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தொன்மையான கல் மரப் படிமங்களை பாதுகாக்கும் நோக்கில் […]

செய்திகள்

பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணி: அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு

விழுப்புரம், பிப். 1– விழுப்புரம்  பழைய பேருந்து நிலையம் அருகே பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பூந்தோட்ட குளத்தினை அமைச்சர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு பூந்தோட்டகுளத்தில் அமைக்கப்பட்டுவரும் பூங்கா, சிறுவர் விளையாட்டு பூங்கா, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை, உடற்பயிற்சி தளம் […]