செய்திகள்

அரக்கோணத்தில் ரூ.1.90 கோடியில் வணிகவரி அலுவலக கட்டிடம்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

சென்னை, பிப்.24– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், வணிகவரித் துறை சார்பில் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் 1 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் 14 கோடியே 30 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். வணிகவரித் துறையின் 2018–19ஆம் ஆண்டிற்கான […]

செய்திகள்

அம்மா மினி கிளினிக்குகளில் நியமிக்கப்பட்ட 26 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூர், பிப். 22– 44 அம்மா மினி கிளினிக்குகளில் முதற்கட்டமாக நியமிக்கப்பட்ட 26 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் வழங்கினர். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ம.ப. சிவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் கலந்து கொண்டு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 4ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இணையம் வழியாக […]

செய்திகள்

வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளம்: எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்

திருப்பத்தூர், பிப்.11– வேலூர் மாநகரில் வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலூர் மாநகரில் வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளம் திறப்பு நிகழ்ச்சி வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேலூர் மண்டல கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணையதளத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட […]

செய்திகள்

வேலூரில் அதி நவீன ‘நறுவீ’ மருத்துவமனை: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

* ரூ.600 கோடி செலவில் 5 லட்சம் சதுரடியில் 14 தளங்கள் * 500 படுக்கை வசதிகளுடன் சர்வதேச தரத்தில் சிகிச்சை வேலூரில் அதி நவீன ‘நறுவீ’ மருத்துவமனை: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் சென்னை, பிப்.6- வேலூரில் சர்வதேச தரத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ‘நறுவீ ’ மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். வேலூரில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி ‘நறுவீ’ மருத்துவமனை ரூ.600 கோடி […]

செய்திகள்

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை

திருப்பத்தூர், ஜன. 5– திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையினை கலெக்டர் ம.ப. சிவன் அருள் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர்கபீல் துவக்கி வைத்தனர். நடப்பாண்டின் திருப்பத்தூர் சர்க்கரை ஆலையின் 30 ஆயிரம் மெ.டன் கரும்போடு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை […]

செய்திகள்

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி: அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் அடிக்கல்

திருப்பத்தூர், டிச. 21– வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் கட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் வாணியம்பாடி நகராட்சியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் வாணியம்பாடி கோட்டாட்சியர் புதிய கட்டடம் […]

செய்திகள்

வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டமானப் பணிகள்: அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு

வேலூர், டிச. 11– வேலூரில் ரூ. 48 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காட்பாடி விஐடி கல்லூரி அருகில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 37 ஏக்கர் பரப்பளவில் ரூ. 16 கோடியே 45 லட்சம் மதிப்பில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமானப்பணிகளான தடகள ஓடுதள பாதை, நீச்சல் குளம், கூடைப்பந்து மைதானம், ஹாக்கி, உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம் போன்றவற்றின் கட்டுமானப் […]