வாஷிங்டன், நவ. 1– அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். முதலில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது டிரம்ப்புக்கான ஆதரவு பெருகியிருப்பது கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. […]