வாஷிங்டன், மார்ச் 17– வெனிசுலாவை சேர்ந்த போதை கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத குடியேறிய 200க்கும் மேற்பட்டோரை, எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டிரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]