புதுடெல்லி, ஏப். 14– தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும் ‘விசுவாவசு’ தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். […]