அன்று வானம் முழுவதும் இருள். ஆங்காங்கே சில நட்சத்திரங்களுடன் நிலா. அன்று நிறைந்த அமாவாசை .அந்த அமாவாசை அன்று இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதும் திதி கொடுப்பதும் யாருக்காவது தானம் கொடுப்பதும் சிறந்தது என்று கோயில்கள் நீர்நிலைகள் உள்ள எல்லா இடங்களிலும் நிரம்பி வழிந்தார்கள் ஆட்கள். “இறந்தவர்களுக்கு திதி கொடுத்துட்டு அப்படியே நாலு அஞ்சு பேருக்கு சாப்பாடு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் .பெரியவங்களோட ஆசிர்வாதம் பூரணமா கிடைக்கும் ” என்று ஒரு ஜோசியர் சொன்னதை […]