புதுடெல்லி, டிச.9– எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25–ல் தொடங்கியது. இதில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட மசோதாக்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக […]