திருச்சி, ஏப்ரல் 9- திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, சென்னையில் உள்ள அவரது மகன் அருண் நேருவின் வீடு, தம்பி ரவிச்சந்திரன் வீடு, கோவையில் உள்ள இன்னொரு தம்பியான மணி வண்ணன் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினார்கள். இந்த சோதனை பல இடங்களில் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் நடத்தி வரும் டி.வி.எச். கட்டுமான நிறுவனம், […]