…. செல்வி இன்று பெரிய பேச்சாளர். கதை .கவிதை. கட்டுரை என்று எது கொடுத்தாலும் வெளுத்து வாங்கி விடுவார் ஆசிரியர் தொழில் செய்து கொண்டிருக்கும் அவருக்குள் பன்முகத் திறமைகள் கொட்டிக் கிடப்பதாக உடன் பணி புரியும் ஆசிரியர்களும் அவளுடைய மேடைப்பேச்சைக் கேட்பவர்களும் சொல்வார்கள். அதிலும் ஓவியம், பாட்டு என்றால் அவளுக்கு உயிர். அவ்வளவு நேர்த்தியாக கதை சொல்வாள். தொடக்கத்தில் ஆரம்பிக்கும் அந்தக் கதையை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் விவரிக்கும் பாங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறுவார்கள் . […]