சிறுகதை

அந்தக் காகித வரிகள் – மு.வெ.சம்பத்

ராமய்யன் அந்தத் தெருவின் கடைசியில் உள்ள சின்னக் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தான். அவன் மண்பாண்டங்கள், களிமண் பொம்மைகள் செய்து பிழைப்பை நடத்தி வந்தான். அந்தத் தெருவின் நடுவில் பிரம்மாண்டமாக மாளிகை போன்று கட்டப்பட்டிருந்த வீட்டில் வசித்து வரும் பணக்காரர் கந்தசாமி தினமும் வாகனத்தில் ராமய்யன் வீட்டைத் தாண்டிச் செல்லும் போது ராமய்யனை ஏளனமாக பார்த்து விட்டுச் செல்வார். முதலில் இந்தக் குடிசை வீட்டை அகற்ற முன் வரவேண்டுமென மனதில் நினைப்பார். ராமய்யன் காலையிலிருந்து ஏதும் வியாபாரம் […]