வாஷிங்டன், செப் 23 காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என பாலஸ்தீன அதிபரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். ‘குவாட்’ உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அதன் ஒரு பகுதியாக டெலாவார் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவாார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி.ஷ்ரமா ஓலி, குவைத் இளவரசர் ஷேக் சபா காலிட் ஆகியோரையும் […]