செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்: புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்

ஈரோடு, ஜன. 22– ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியான மணிஷ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. புறக்கணித்துவிட்டது. பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க., நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பிரதானமாக தேர்தல் களத்தில் உள்ளன. மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. தேர்தல் […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 900 அண்ணா தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் சென்னை, டிச.27– அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்திய அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். […]

Loading

செய்திகள்

தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பா?

குடியரசு நாள் அணிவகுப்புக்கு சுழற்சி முறையில்தான் அலங்கார ஊர்தி: அரசு விளக்கம் சென்னை, டிச. 23– குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இது வதந்தி என நிராகரித்துள்ளது. வதந்திகளை நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டு அது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி […]

Loading

செய்திகள்

2025ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, டிச.9– 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷகம் எப்போது நடைபெறும். வீர வசந்தராயர் கோவில் புனரமைப்பு பணிகள் எப்போது நடக்கும்? என்று அண்ணா தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:– அடுத்த ஆண்டு […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது

சென்னை, நவ.2- தமிழக சட்டசபை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29-ந் தேதி வரை 9 நாட்கள் […]

Loading

செய்திகள்

ஆலந்தூர் கிழக்கு பகுதி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வைகைச்செல்வன், கே.பி. கந்தன்  பங்கேற்பு

சென்னை, அக். 25 சென்னை புறநகர் மாவட்டம், ஆலந்தூர் கிழக்கு பகுதி அண்ணா தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணி பிரசாத் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் எம்.எம்.பகீம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வரதராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் கே.புருஷோத்தமன், ஏ.லட்சுமிகாந்தன் என்கிற லோகேஷ், பகுதி கழக அவைத்தலைவர் முன்னாள் கவுன்சிலர் எஸ்.டார்வின், பகுதி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர்கள் காவேரி கிருஷ்ணன், உமா […]

Loading

செய்திகள்

2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய முழு பலத்தை காண்பிக்க வேண்டும்

நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை சென்னை, ஜூலை 27–- 2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய முழு பலத்தை காண்பிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக 10–-ம் தேதி முதல் 19-–ம் தேதி வரையில் 26 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, 2-ம் கட்ட ஆலோசனை […]

Loading

செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை, ஜூலை19- 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சென்னையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 7வது நாளான நேற்று காலையில் பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டமும், மாலையில் கோவை தொகுதிக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு […]

Loading

செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 10– ஜாமீன் வழங்கக் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்ட பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டு ஆகியும் ஜாமீன் வழங்காதது குறித்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் இந்த […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: ஜூலை 10 வாக்குப்பதிவு

விழுப்புரம், ஜூலை8- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. எனவே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மற்றும் அக்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க. வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. […]

Loading