சென்னை, ஏப். 7– டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை – என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் கூறியுள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் நிருபர்களை சந்தித்த அண்ணா திமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறது? உங்களுக்கு பயமா? என்று […]