டெங்கு காய்ச்சல் மொத்த தமிழகத்தையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
டெங்கு காய்ச்சல் பரவி`அபாயக் கட்டத்தில் கொண்டு வந்ததால் காப்பாற்ற முடியவில்லை’ என்று மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
19- ம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான பிரச்னையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக டெங்கு தாக்கம் நிலவி வருகிறது. தீவிரமழை தொடங்கும் முன்பே, பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வந்தது.
சென்னையில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 50 பேருக்கும் மேல் டெங்கு அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
டெங்கு பாதிப்பு அதிகமாக, மக்கள் மத்தியில் போதிய விழிப்புஉணர்வு இல்லாததே காரணம்.
டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, அது எப்படி மற்றவருக்குப் பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அதை வேறுபடுத்தி அறிவது?, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் என்னென்ன ?
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.
காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, `இது டெங்கு காய்ச்சலா’ அல்லது `பிற காய்ச்சலா’ என்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
நன்றி :விகடன்