செய்திகள்

நன்மங்கலம் அரசு பள்ளி குடியரசு தின விழா: சுவிஸ் நாட்டு இளவரசி பிராங்கோயிஸ் பங்கேற்பு

Spread the love

சென்னை, ஜன. 27–

ஹார்ட் பார் இந்தியா அறக்கட்டளை சார்பில் நன்மங்கலத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் சுவிஸ் நாட்டு இளவரசி பிராங்கோயிஸ் கலந்து கொண்டார்.

கோவிலம்பாக்கம், அம்மான் நகர், பெருங்குடி மற்றும் கரப்பாக்கம் போன்ற பல்வேறு அரசு பள்ளிகளுக்கும் தனது சேவையை ஹார்ட் பார் இந்தியா அறக்கட்டளை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், 5 பால்வாடிகளையும் கவனித்து வருகிறது.

இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் இந்திய மேலாளர் மின்னி சாரா ஆபிரகாம், திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் மற்றும் அனைத்து ஹார்ட் பார் இந்தியா அறக்கட்டளை ஊழியர்களும் கலந்து கொண்டனர். மேலும், நிவேதன் மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த நட்சத்திர மேரி மற்றும் எனிசா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வட்டார கல்வி அதிகாரி சார்லஸ் பீட்டர், கல்வி சிறப்பு அதிகாரி மேடவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைமணி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சற்குணம் பிரகாஷ் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பேபி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிராங்கோயிஸை கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிராங்கோயிஸ், தனது குழு பள்ளிகளின் ஒத்துழைப்புடன் மேலும் முன்னேற விரும்புகிறது. ல்வியில் முழுமையாக கவனம் செலுத்த மாணவர்களை அறிவுறுத்தினார். மாணவிகள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்திட வாழ்த்து கூறினார். மேலும், பள்ளிகளுக்கு ஆலோசகர்களை அனுப்பவும், கல்வியில் மாணவர்களின் நடத்தை மாற்றங்களை கணிகாணிக்கவும் அவர் பரிந்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *