வர்த்தகம்

டாக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் அமோல் மருத்துவமனையில் சுவிஸ் பந்து உடற்பயிற்சி முகாம்

சென்னை, மார்ச் 3–

வளசரவாக்கம் ‘அமோல்’ மருத்துவமனை உடற்பயிற்சி மையம் சார்பில் சுவிஸ் பந்து ஒரு நாள் பயிற்சி முகாம் உடற்பயிற்சி பயிற்சியாளர், பிசியோதெரபி படிக்கும் மாணவர்கள், உடல்நலம் பேணுவோருக்காக நடத்தப்பட்டது. பிசியோதெரபி துறையில் 20 ஆண்டு அனுபவம் பெற்ற நிபுணர் டாக்டர்.பி.உமா மகேஸ்வரி இந்த பயற்சியை நடத்தினார். ‘அமோல்’ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். ராஜேஷ் சான்றிதழ்களை வழங்கினார். அனைவருக்கும் சுவிஸ் பந்து உடற்பயிற்சி வசதிகள் பற்றிய கையேடு வழங்கப்பட்டது.

டாக்டர் உமா மகேஸ்வரி பேசுகையில், வலி இல்லா வாழ்க்கை பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த சுவிஸ் பால் உடற்பயிற்சி ஏற்றது ஆகும். தரையில் நிலையாக உட்கார்ந்து பல்வேறு பயிற்சி செய்வதை விட, இந்த பந்தில் பல்வேறு உடற்பயிற்சி செய்வது கூடுதல் பலன் கிடைக்கும். வயது வித்தியாசமின்றி, சிறுவர் முதல் பெரியவர் வரை இதில் உடற்பயிற்சி செய்யலாம் என்றார்.

இதன் பயிற்சி வகுப்பில் யார், எத்தகைய அளவு பந்தை பயன்படுத்துவது, பாதுகாப்பாக வைத்து பயிற்சி செய்வது, உடல் பாகங்கள் சீராக இருக்க எந்த பயிற்சி செய்வது என்பது பற்றி விளக்கிக் கூறினார்.

உடலில் கை, கால், இடுப்பு, கழுத்து, தலை என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற பயிற்சி சுவிஸ் பந்தில் உள்ளது. இடுப்பு வலி, தோள்பட்டை இறுகுதல், வெர்டிகோ கழுத்து வலி போன்றவை சிறந்த உடற்பயிற்சி மூலம் எப்படி சிகிச்சை செய்யலாம் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியை ஒவ்வொருவரும் தனித்தனியே மீண்டும் மீண்டும் செய்து பழகினர். அனைவருக்கும் இதற்கான சான்றிதழை ‘அமோல்’ நிர்வாக இயக்குனர் டாக்டர். ராஜேஷ் வழங்கி, அவர்களை ‘வலி இல்லா உலகை நிர்மாணிக்கும் தூதுவர்கள்’ என பாராட்டினார்.

ரத்த ஓட்டம் சீராக்க

சுவிஸ் பந்து உடற்பயிற்சியில் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இறுகிய தசைகளை தளர்ச்சி செய்து, உறுதியாக்கி ‘பிட்னஸ்’ உடையவர்களாக எளிதில் மாற்றுவது இதன் சிறப்பாகும் என்றார் டாக்டர் உமா மகேஸ்வரி.

காக்கா வலிப்பு நோயாளிகளை மருந்து மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சை மூலம் காப்பாற்றி வருபவர் உமா மகேஸ்வரி. அமெரிக்க குளோபல் அமைதி பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இவர் சிறந்த முதுநிலை பிசியோதெரபி நிபுணர். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி டாக்டர் பட்டப் படிப்பு படித்து 20 ஆண்டு அனுபவம் பெற்றவர். பிசியோதெரபி சிகிச்சையில் நவீன பயிற்சிகள் வழங்குவதுடன் சாதனங்கள் இல்லாமல், தனது கையால் எந்தவிதமான உடல் பாதிப்பையும் சரி செய்வதில் வல்லவர்.

ஒய்.எம்.சி.ஏவில் பயிற்சி

விளையாட்டு வீரர்களுக்கான பிசியோதெரபி துறையில் அக்கறை செலுத்திய பி.உமா மகேஸ்வரி, சென்னை ஒய்.எம்.சி.ஏயில் பயிற்சி பெற்றார். தனியாக பிசியோதெரபி மருத்துவமனையை துணிச்சலாக துவக்கினார். அனிருதா பெயின்கேர் மற்றும் சீரமைப்பு மையம் (அமோல்) நிறுவினார்.

இவரது நோயாளி பட்டிலில் சிறுவன் முதல் 80 வயது பெரியவர்கள் வரை உள்ளார்கள். மரணப் படுக்கையில் இருந்த பலர், மீண்டும் எழுந்து, நடந்து வழக்கமான பணிகள் செய்யும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளனர். குறைபாடு உள்ள சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து, வழக்கமான பள்ளியில் படிக்கும் மாணவராக மாற்றிய சிறப்பும் இவருக்கு உண்டு. 60 வயதுக்கும் மேற்பட்ட 5 ஆயிரம் பேருக்கு இவர் சிகிச்சை அளித்து நடமாட வைத்துள்ளார். இது வரை 500 இளம் பிசியோதெரபி மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் வலி, எலும்புக் கோளாறுகளால் ஏற்படும் வலி, தசை பிடிப்பு – கோளாறால் வலி, காக்காய் வலிப்பு உள்ளிட்ட பல்வேறு தீராத வலி காரணமாக தாங்க முடியாத வேதனைகளுக்குள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து (மருந்து, மாத்திரை, ஆபரேஷன் எதுவும் இல்லாமல்) அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவதில் செயல்படும் மருத்துவ மையம் அமோல் ஆகும்.

இது பற்றி அறிய www.amol.co வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *