வர்த்தகம்

போக்குவரத்து நெருக்கடி தீர ஸ்வீடன் நாட்டு தூதரகம் நடத்திய போட்டியில் ஆக்கப்பூர்வமான புதிய யோசனை

சென்னை, மார்ச்.6

இந்தியாவில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 42 மணி நேர ஸ்வீடன் இந்தியா ஹேக்கத்தான் போட்டி. இந்திய போக்குவரத்து பிரச்சனைகளுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் செயல்பாட்டுத் தீர்வு காணும் விதத்தில் ஏற்பாடான நிகழ்வு இது.

ஸ்வீடன் மற்றும் இந்தியா முழு வதிலும் இருந்து 76 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் – மாணவர்கள், தொழில்முனைவோர், புதுமை ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் வல்லுநர்கள் மற்றும் இயக்க வல்லுநர்கள் நெருக்கமாக பணியாற்றி, நிலையான இயக்கத்தின் எதிர்கால சவால்களுக்கான தீர்வுகளை உருவாக்கினர். போக்குவரத்து துறைக்கு புதிய ஆலோசனை கண்டுபிடிப்பு வாகனத்திற்கான நவீன உள்கட்டமைப்பு மற்றும் நவீன சாதனங்கள் போன்ற 6 வகையான தலைப்புகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.

குறிப்பிட்ட போட்டி பகுதிகளின் கீழ் நிபுணர்களை உள்ளடக்கிய 48 பேர் கொண்ட நடுவர் மன்றம், கோத்தன்பர்க், புனே, சென்னை, டெல்லி மற்றும் வோக்ஸ்ஜோ போன்ற வெவ்வேறு இடங்களிலிருந்து டிஜிட்டல் முறையில் ஒன்றிணைந்த வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.

இந்தியாவுக்கான ஸ்வீடனின் தூதர் கிளாஸ் மோலின் வரவேற்றார்.சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ஸ்வீடன் நிறுவனத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்து ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் குறித்த தகவல்களை வழங்கியது சிறப்பு என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *