வாழ்வியல்

பாண்டிய மன்னன் மகள் சூரிரத்னா கொரிய நாட்டரசியான சுவையான வரலாற்று ஆராய்ச்சி

பாண்டிய மன்னன் மகள் சூரிரத்னா கொரிய நாட்டரசியான சுவையான வரலாற்று ஆராய்ச்சி ஆதாரத்துடன் கிடைத்துள்ளது. அது பற்றிய விபரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.

கொரிய – தமிழ் மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி அறிந்து ஆச்சரியபட்டு அது குறித்த விரிபான தகவல்களை சென்னையில் வாழும் கொரியர்களும் கொரியாவில் வாழும் தமிழர்களும் சேகரிக்கிறார்கள்..

இரு மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து தமிழ் நாட்டில் பல ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதையும் அறிந்து வியக்கிறார்கள். இதில் தம் பங்காக எதாவது செய்ய வேன்டும் என்று கருதி தமிழை முறையாக கற்றுக்கொள்ளத் துவங்குகிறார்கள் சென்னையில் வேலை செய்யும் கொரியர்கள் .

ஹூண்டாய், ஹூன் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அவர்களது குடும்பங்களுமாக சென்னையில் 4000 க்கு மேற்பட்ட கொரியர்கள் வசிக்கிறார்கள். .

கொரிய மொழியில் பல தமிழ் வார்த்தைகள் இருப்பதையும் அது தமிழில் பேகசப்படுவது போலவே உச்சரிக்கப்படுவதை முதலில் சொன்னவர்கள் பிரெஞ்சு பாதிரியார்கள்.

இரண்டு நாடுகளிலும் பணிபுரிந்த பாதிரியார்கள் கண்டுபிடித்த விஷயம் இது. அன்று முதல் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹவாய் பல்கலைக்கழகத்தின் “கொரிய மொழி மையம்” இதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இவர்கள் ஆய்வின் படி கிட்டத்தட்ட கொரிய மொழியில் 5000 தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன.

பல வார்த்தைகளின் பொருளும் அதேதான் மட்டுமில்லை ஒலிக்கும் பாணியும் உச்சரிப்பும் கூட தமிழ் போலவே இருப்பது தான் ஆச்சரியம்.

கொரிய – தமிழ் நாடுகளுக்குமிடையே உள்ள உறவு முதல் நூற்றாண்டில் துவங்கியிருக்கிறது.

கொரியாவில் சூரோ என்ற அரசன் கார்க் என்ற பகுதியை ஆண்டுவந்தார். கார்க் என்ற சொல்லுக்கு பண்டைய தமிழில் மீன் என்று பொருள். அந்த மன்னரின் கொடியில் மீன் சின்னம். இருக்கிறது. அவரும் அன்றைய பாண்டிய(வேளநாடு) மன்னர் ஆயியும் நல்ல நண்பர்கள். அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணை கார்க் நாட்டின் இளவரசர் திருமணம் செய்துகொண்டதால் வணிகம், அரசுப்பணிகளில், படைகளில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைந்திருக்கிறார்கள். பின்னாளில் சூரிரத்னா என்ற அந்தப் பெண் கொரிய நாட்டின் அரசியாகியிருக்கிறார். இன்றும் அவரது சமாதி கிம்ஹே என்ற கொரிய நகரில் இந்த விபரங்கள் பதிக்கப்பட்ட கற்பலகையுடன் இருக்கிறது.

கொரியா நாட்டில் சொல்லா என்பது ஒரு மாவட்டத்தின் பெயர் இது சோழ என்ற சொல்லின் திரிந்த வடிவம் என்று கருதப்படுகிறது. இது போன்ற பல விஷயங்களை ஆய்ந்து நிறைய எழுதியிருக்கிறார்கள் என். கண்ணன், ஒரிசா பாலு, நாகராஜன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *