சென்னை, நவ. 3–
தமிழ்நாடு பொறியியல் பி.இ./பி.டெக்., மாணாக்கர்கள் சேர்க்கை 2020–21 பொதுகலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் 7–ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டை சார்ந்த மாணாக்கர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணாக்கர்களும் இந்த துணைக்கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 52 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் மாணாக்கர்களுக்கு இணைய தளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும்.
மாணாக்கர்கள் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக இன்று (3–ந்தேதி) முதல் 7–ந்தேதி வரை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.