செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஸ்டாலின்

சென்னை, மார்ச் 9–

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உட்பட பல அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், ‘’கொரோனா வைரஸ் முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *