செய்திகள்

கோமாளித்தனமாக கேள்வியைக் கேட்டு மக்களை குழப்பும் ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தாக்கு

சென்னை, மார்ச் 3–

ஸ்டாலின் கோமாளித்தனமாக கேள்வியைக் கேட்டு மக்களை குழப்புகிறார் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி காட்டமாக பேசினார்.

ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி சார்பில் மடிப்பாக்கத்தில் சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி செயலாளர் வி.குமார் தலைமையில் மாவட்டக் செயலாளர் கே.பி.கந்தன் முன்னிலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனத் தலைவர் பா.வளர்மதி பேசியதாவது:

அம்மா பல்வேறு சாதனைகளை செய்து உள்ளார். அதேபோல எடப்பாடி பழனிச்சாமியும் பல்வேறு நல்ல திட்டங்களும் சாதனைகளும் செய்துள்ளார். அதில் முக்கியமாக 9, 10,11ம் வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதாமல் இந்த வருடம் அனைவரையும் தேர்வு பெற்றவர்களாக அறிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மிகவும் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று மேடையைப் போட்டு கையுடன் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு அதில் குறிப்பிட்ட பெயர்களை எழுதி அவர்களை அழைத்து உங்களுக்கு என்ன குறை என்று கேட்கிறார். அப்பொழுது அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி எழுந்து என்னுடைய கணவரை சில நாளாக காணவில்லை என்று கேட்டு என் கணவரை கண்டுபிடித்து தாருங்கள் என கேட்க அப்பொழுது அங்கிருந்த மக்கள் சிரிக்க தொடங்குகிறார்கள். அதுமட்டுமல்ல அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று மேடை போட்டு பேசும் பொழுதும் அங்கிருந்த கூட்டத்தில் ஆண் ஒருவர் என் மனைவியை கடந்த 9 மாதங்களாக காணவில்லை எனவே அவளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உரத்த சத்தத்தோடு கேட்கிறார்.

இப்படி கோமாளித்தனமாகவும், நகைச்சுவையாகவும் மக்கள் மத்தியிலே கேள்விகளை எழுப்பி மக்களை குழப்பி கொண்டு வருகிறார் இந்த ஸ்டாலின். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கெட்டுப் போயுள்ளது என்றும் கூறுகிறார். அப்படி என்றால் அவருடைய சகோதரி ஊர் ஊராய் சென்று சுதந்திரமாக பாதுகாப்பாக பேசி வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அவர் எப்படி சுதந்திரமாகும் பாதுகாப்பாகவும் பேசமுடியும். யோசிக்க வேண்டாமா.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில். சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் லியோ சுந்தரம், வடக்கு பகுதி கழக செயலாளர் டி.சி.கர்ணா, மேற்கு பகுதி கழக செயலாளர் ஜி.எம்.ஜானகிராமன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் சி.மணிமாறன், குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏசுபாதம், புறநகர் மாவட்ட இணை செயலாளர் ஜே.எல்.லஷ்மி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் கண்ணபிரான், தலைமை கழக பேச்சாளர் தஞ்சை ராஜசேகர் மகளிர் அணி செயலாளர் செல்வராணி சுந்தர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தனசேகர் மற்றும் சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி வட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் வட்ட செயலாளர் பொன்னுசாமி நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *