வர்த்தகம்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருக்கு நவீன தொழில்நுட்பம் வழங்கும் ஆத்தர்கேப் இந்தியாவுடன் ஒப்பந்தம்

சென்னை, நவ. 26

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சி திறனை அதிகரிக்கும் வகையிலும் அவர்களுக்கு தேவையான பொருளடக்கங்களை வழங்கவும், அவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் இதழ்களில் வெளியிடவும் அதற்கு தேவையான மென்பொருள் வழங்கவும் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆத்தர்கேப் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக இணை துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் என்.சேதுராமன், ஆத்தர்கேப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சாந்தி கிருஷ்ணமூர்த்தி,முதுநிலை உதவி தலைவர்(மனித வளம்) சுபா காசிவிஸ்வேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக இணை துணை வேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் கூறுகையில், நாட்டில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்காக அதிக நிதிகளை ஒதுக்கி மாணவர்களை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்றார்.

முன்னதாக எஸ்ஆர்எம் ஆராய்ச்சி துறை இணை இயக்குனர் எஸ்ஆர்எஸ் பிரபாகரன் ஒப்பந்தத்தின் நோக்கங்கள் பற்றி குறிப்பிட்டார். இதில் ஆத்தர்கேப் இந்தியா நிறுவனத்தின் விற்பனை ஆலோசகர் புனித் தந்தானியா, உற்பத்தி மேலாளர் நீலஞ்ஜன் சின்ஹா, எஸ்ஆர்எம் துணை பதிவாளரும், ஓட்டல் மேலாண்மை மையத்தின் இயக்குனருமான அந்தோணி அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *